நாசரேத் பகுதிகளில் உள்ளவர்கள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வருகிற பிப்ரவரி 15 ந் தேதிக்குள் ஒப்படைக்க கெடு விதித்து திருச்செந்தூர் வனத்துறையினர் பிரச்சாரம் செய்தனர்.
தூத்துக்குடி வனக்கோட்டம் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில் நாசரேத் பகுதியில் வாழும் கிராம மக்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தால் தாமாகவே முன்வந்து வனத்துறை அலுவலரிடம் அல்லது ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலமாக பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறை எஸ்.ஐ. பிரான்ஸிஸ் அரவிந்த் தலைமையில் வனத்துறையினர் துண்டு பிரசுரம் மற்றும் வாகனத்தில் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒப்படைக்கும் நபர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் அவ்வாறு ஒப்படைக்காமல் வருங்காலத்தில் வன விலங்குகள் வேட்டையாடுதல் போன்ற சமுக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய படைக்கலன் சட்டத்தின் கீழ் தன்டனை விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டு உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் திருச்செந்தூர் வனச்சரகம் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு வனத்துறையினர் வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


