Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஜன்னலில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை; ஹீரோவான இந்தியர்… வைரல் வீடியோ
    இந்தியா

    ஜன்னலில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை; ஹீரோவான இந்தியர்… வைரல் வீடியோ

    SahabudeenBy SahabudeenJune 14, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கிழக்கு லண்டனின் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையின் மேல்தள ஜன்னலில் இருந்து தவறி விழும் நிலையில் இருந்த 3 வயது சிறுமியை இந்திய வாலிபர் ஒருவரும், போலீஸ்காரரும் இணைந்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.இந்த மீட்பு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சம்பவத்தன்று, அந்தக் கடையின் மேல்தள ஜன்னல் பகுதிக்கு சென்ற சிறுமி எதிர்பாராத விதமாக கீழே விழும் ஆபத்தான நிலையில் சிக்கினார். ஜன்னல் விளிம்பைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த அவர் பயத்தில் அலறியதால், கீழே நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உதவிக்காக கூச்சலிட்டனர். ஒரு பெண் கீழே உள்ள ஜன்னல் வழியாக கையை நீட்டிசிறுமியை காப்பாற்ற முயன்றாலும், அவளது பிடி தளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.

    அந்த நேரத்தில் அப்பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முகமது ஜெசிலும், ஒரு போலீஸ்காரரும் உடனடியாக செயல்பட்டனர். அவர்கள் கடையின் மேற்கூரை வழியாக சென்று, சிறுமி விழும் இடத்துக்கு கீழே நின்று தயார் நிலையில் இருந்தனர். சில நொடிகளில் சிறுமி கீழே விழுந்தபோது, முகமது ஜெசில் அவளை லாவகமாகபிடித்தார். அருகில் இருந்த போலீஸ்காரர் இருவரையும் நிலைநிறுத்த உதவினார்.இதனால் சிறுமி எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி இருவரையும் பாராட்டினர்.உணவக மேலாளராக பணிபுரியும் ஜெசில், “நான் எந்த நாயகனும் இல்லை.ஒரு குழந்தை ஆபத்தில் இருப்பதை பார்த்த தந்தையாக உதவினேன்.இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் அவளை பிடிக்க உதவியிருக்கலாம்” என்றார்.

    சிறுமியின் தந்தையும், ஜெசிலும் போலீஸ்காரரும் உண்மையான நாயகர்கள் என்று புகழ்ந்துள்ளார். இந்த மீட்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Post Views: 714
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.