Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தேனிலவுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் உயிரிழப்பு…
    இந்தியா

    தேனிலவுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் உயிரிழப்பு…

    SahabudeenBy SahabudeenJune 21, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கணவரிடம் போலீசார் விசாரணை

    முசோரிக்கு தேனிலவுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லியை சேர்ந்தவர் ஸ்ரீசரண் (வயது 28) இவர் குருகிராமை சேர்ந்த ராதா காயத்ரியை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ராதா காயத்ரி (வயது 27) குருகிராமில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த புதுமண தம்பதி தேனிலவு செல்ல திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 13 -ம் தேதி டெல்லியிலிருந்து உத்தரகாண்டிற்குப் புறப்பட்டனர். ரிஷிகேஷைப் பார்வையிட்ட பிறகு, அவர்கள் 14-ம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் முசோரியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    அன்று இரவு இருவரும் தங்கள் அறையில் உல்லாசமாக இருந்துவிட்டு விடிய விடிய மது அருந்தியதாகவும், அதிகாலை சுமார் 3:30 மணியளவில் உறங்க சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் காலையில் அவரது கணவர் கண்விழித்தபோது, காயத்ரி தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரதுமூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் உடனடியாக ஹோம்ஸ்டே நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராதா காயத்ரி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். புதுபெண் மரணத்திற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவதற்காக, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் பரிசோதனை நடைபெற்று வருகின்றன

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி சில மாதங்களிலேயே, 27 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஹோட்டல் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் முசோரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Post Views: 465
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.