Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » இஸ்லாமிய பெருமக்களுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !
    இந்தியா

    இஸ்லாமிய பெருமக்களுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

    SahabudeenBy SahabudeenApril 8, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இஸ்லாமிய பெருமக்களுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

    மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது .

    புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்காக அல்லாஹ் த ஆலாவினால் வழங்க பட்ட மிக பெரிய வெகுமதியாகும். ஓரு அதீஸில் ரமலான் மாதம் எத்தகை சிறப்பு உள்ளது என்று ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள்.

    ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளை கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள். என்பதாக முகமது நபி அவர்கள் அருளுகிறார்கள்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் , மன ஊசலாட்டங்களையும், நீக்கி விடும் என ஓரு அதீஸில் அறிவிக்க பட்டுள்ளது.

    நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் , பலன்களும் , இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப்பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டும் மென்பதுதான் நோக்கம் அவை அனைத்தும் கொஞ்சம் பசித்திற்கும் பொழுதான் கிடைக்க பெறுகின்றன.

    அவற்றில் மிக பெரிய பலனாகிய மனோ இச்சயை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதினால் அடங்கியிருக்கிறது .சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண்டிருக்கிறான் நோன்பினால் மற்றொரு பலன் என்ன வென்றால் ஏழைகள் போல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும்.

    இந்த நோக்கம் மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால் இனிப்பு வகைகள் ஆகாரங்கள் ஆகியவற்றை கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில் தான் உண்டாக முடியும் ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சம் நேரம் பசித்திருப்பதின் மூலம் தான் சாத்தியமாகும்.

    ஆகவே . இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மார்க்கத்தை கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும் ஜக்காத்தினையும் செய்த இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய ரமலான் நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்

    Post Views: 201
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.