Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணியால் பரபரப்பு
    இந்தியா

    சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணியால் பரபரப்பு

    SahabudeenBy SahabudeenMay 30, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். பயணிகள் உடைமைகள் சோதனை முடிந்து குடியுரிமை சோதனைக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற பெத்தனன் இளங்கோ (வயது 47) என்ற பயணி, அந்த விமானத்தில் தனது தந்தையுடன் அபுதாபி வழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். அவரும், அவரது தந்தையும், குடியுரிமை சோதனைக்கு நடந்து சென்றபோது திடீரென பெத்தனன் இளங்கோ, விமான நிலையத்திலேயே தனது ஆடைகளை கலைந்து நிர்வாணமாக ஓடினார். இதை கண்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் விமான நிறுவனம், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பயணியை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதுடன் தந்தை-மகன் இருவரது விமான பயணத்தை ரத்து செய்தனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உடல் நலம் தேறிய பின் மீண்டும் பயணிக்கும்படி அதிகாரிகள் கூறினார்.

    அவர், மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தான் அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து தந்தை- மகன் இருவரையும் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைத்தனர்.

    Post Views: 328
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.