Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம் – கோவில்பட்டியில் பரபரப்பு
    இந்தியா

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம் – கோவில்பட்டியில் பரபரப்பு

    SahabudeenBy SahabudeenJune 8, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம் – கோவில்பட்டியில் பரபரப்பு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டிபிஎஸ்(DBS) வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளார். அப்போது திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர் தனது முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஏடிஎம் மையம் அமைந்துள்ள பகுதி என்பது எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. அப்படி இருக்கும் பகுதியில் திருட்டு முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Post Views: 329
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.