Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு செயல்படத் தொடங்கியது
    இந்தியா

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு செயல்படத் தொடங்கியது

    SahabudeenBy SahabudeenJuly 4, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மழை வெள்ள பாதிப்பிற்கு பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு அதிநவீன வசதிகளுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக டாக்டர் எம்.ரீட்டா ஹெப்சி ராணி மற்றும் மருத்துவர் குழுவினர் அளித்த பேட்டியில், “2001ம் ஆண்டு நமது முத்து நகரில் ஆரம்பிக்கப்பட்டு 23 வயதை எட்டும் நம் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சைப் பிரிவில் மருத்துவச் சிசிச்சைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

    நவீன கண் புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery) மட்டுமல்லாமல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Keratoplasty) கண் பட்டை இறங்கி இருப்பதை சரி செய்தல் (Ptosis Surgery), கண் இமை சீரமைத்தல் (Eye Lid reconstruction Surgery), கண்ணீர் அழுத்த அறுவை சிகிச்சை (Trabeculectomy), சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புக்களை குணப்படுத்தும் லேசர் சிகிச்சை மற்றும் கண்ணுக்குள் ஏற்படும் ரத்தக் கசிவை சரிசெய்ய Intravitreal Injection செலுத்தும் முறை பிறவி கண் பூ விழுந்து மற்றும் கருவிழி அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு அழகியலுக்காக (Cosmetic, Corneal Tattooing), செயற்கை கண் பொருத்துதல் சிகிச்சை முறையும் மேற் கொள்ளப்படுகிறது.

    2023ம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தினால் கடுமையாக நமது மருத்துவப் பிரிவு பாதிக்கப்பட்டதை மருத்துவக் கல்லூரி முதல்வர் கு. சிவக்குமார் பெரும் முயற்சியினால் புதிதாக அமைந்துள்ள கண் சிகிச்சை பிரிவில் டாக்டர் எம்.ரீட்டா ஹெப்சி ராணி தலைமையில் பவானி ப்ரீத்தி, சி.லலிதா, பஸ்தா போன்ற மருத்துவ குழுவினருடன் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.

    “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற முதுமொழிக்கேற்ப எம் மருத்துவர்கள் அனைவரும் சிறப்பாக சேவை செய்து வருகின்றார்கள். எனவே நமது தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்துமாறு தெரிவித்தனர். பேட்டியின் பேட்டியின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, டாக்டர் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Post Views: 149
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.