Homeஇந்தியாசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது.

Must Read

spot_img