Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு முடித்து வைப்பு
    இந்தியா

    பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு முடித்து வைப்பு

    SahabudeenBy SahabudeenAugust 13, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புதுடெல்லி:

    பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. சட்டத்தை மீறி செயல்படமாட்டோம் என பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் உறுதி அளித்தார். அதன்பிறகும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வெளியாகின. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    மேலும், தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்தது. பதஞ்சலி நிறுவத்தின் உத்தரவாதத்தை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைக்க உத்தரவிட்டது.

    பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 186
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.