Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பயங்கரவாதிகளிடம் இருந்து மஞ்சுநாத் ராயின் மகனை காப்பாற்றிய முஸ்லிம் வாலிபர்கள்
    இந்தியா

    பயங்கரவாதிகளிடம் இருந்து மஞ்சுநாத் ராயின் மகனை காப்பாற்றிய முஸ்லிம் வாலிபர்கள்

    SahabudeenBy SahabudeenApril 25, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிவமொக்காவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் உயிரிழந்தார். அவரது மனைவி பல்லவியும், மகன் அபய்ஜெயனும் உயிர் தப்பினர். இந்த நிலையில், மஞ்சுநாத் ராவின் மகன் அபய்ஜெயனை முஸ்லிம் வாலிபர்கள் 2 பேர் காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, 18 வயது நிரம்பிய அபய்ஜெயனையும் பயங்கரவாதிகள் கொல்ல முயன்றுள்ளனர். அப்போது உள்ளூரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர்கள், அவரை தோளில் சுமந்து சென்று பயங்கரவாதிகளிடம்உள்ளூரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர்கள், அவரை தோளில் சுமந்து சென்று பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    இதுபற்றி மஞ்சுநாத் ராவின் மகன் அபய்ஜெயன் கூறுகையில், ‘சம்பவம் நடந்த தினத்தில் நான் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தேன். அம்மாவும், அப்பாவும் எனக்கு ஏதாவது சாப்பிட வாங்க சென்றனர். என்னை அங்கேயே இருக்க சொன்னார்கள். நான் இருந்த இடத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. ஏதோ பட்டாசு வெடிப்பார்கள் என நினைத்தேன். சிறிது நேரத்தில் அனைவரும் ஓட தொடங்கினர். எனது அம்மாவும் வந்து என்னை இழுத்து கொண்டு ஓடினார். அப்போது தான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடுவது தெரிந்தது. நாங்கள்அங்கிருந்து ஓடினோம். அப்பா எங்கே? என்று கேட்டேன். மேலும் திரும்பி பார்த்தபோது எனது தந்தை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் உள்ளூர் காஷ்மீரிகள் 2 பேர் எங்களை காப்பாற்றினர். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க சென்றோம். இப்படி நரகமாகும் என நினைக்கவில்லை’ என்றார்.

    Post Views: 218
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.