தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “ஆர்.எம்.வீரப்பனின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், பொதுச் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். திரைப்பட உலகில் சுறுசுறுப்பான பங்கும் அவர் வகித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


