Author: Sahabudeen

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண்கள் பயன்படுத்த கூடிய கைப்பை, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைக்கு சென்ற பெண் ஒருவர் 2 மணிநேரம் சுற்றி பார்த்து விட்டு, தனக்கு எதுவும் பிடிக்கவில்லை என கூறி விட்டு வெளியே செல்ல முயல்கிறார். அதுவரை பொறுமையாக இருந்த அந்த கடையின் பெண் உரிமையாளர், ஓடி சென்று அந்த பெண் வாடிக்கையாளரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.ஏதேனும் ஒரு பொருளை வாங்கி செல்லுங்கள் என கோரிக்கை வைக்கிறார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் வாடிக்கையாளர், என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார். இந்த வீடியோ வைரலானதும் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். 2 மணிநேரம் அந்த பெண் வாடிக்கையாளர், கடையின் உள்ளே ஒவ்வொரு பொருளாக நின்று பார்த்து விட்டு, எதுவும் வாங்கவில்லை. இதனை குறிப்பிட்ட சிலர், கடை உரிமையாளர்களின் முயற்சி, அவர்களுடைய நேரம்,…

Read More

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்துசெய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாகவழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்திவைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கஉத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது…

Read More

பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், தற்கொலைக்கு முயன்றார். போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த அவர், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த அவர், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தைத்திருநாளான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரியவர்களுக்கு, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது.வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாகபிணைந்துள்ளது. குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர்.இதன் மூலம்,தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகின் பழமையான…

Read More

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சைக்கான வார்டு உள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண், தனது குழந்தையின் சிகிச்சைக்காக குழந்தை சிகிச்சை வார்டில் அனுமதித்தார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது, மருத்துவமனை மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து, சரண்யாவின் தலையில் விழுந்தது. இதில், படுகாயமடைந்த சரண்யா தீவிர சிகிச்சைப்பிரிவில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், 1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறினார் என்று டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;- பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்தபோது, வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். போர்களை தடுத்து நிறுத்தியது குறித்து நான் விளம்பரம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதே சமயம், போரை வேறு யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வரலாற்றில் நோபல் பரிசை பெறுவதற்கு என்னை விட தகுதி வாய்ந்த வேறு ஒரு நபர்…

Read More

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், தென்றல் நகரை சேர்ந்தவர் சாமுவேல். இவர் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே மருந்தகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு மருந்தகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று மீண்டும் காலைமருந்தகத்தை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். பின்னர் கடையை திறந்து ஏதாவது திருடப்பட்டு இருக்கிறதா என சோதித்த பார்த்தபோது விற்பனை முடிந்து வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்தில்திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். திருட்டு சம்பவம் தொடர்பாக கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவர் மருந்து வாங்குவது போல கடையை நோட்டமிட்டு கடையின் உரிமையாளரிடம் பேச்சுக்கொடுக்குகாட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.ம் மேலும் அதே நபர் நள்ளிரவில் கடையிலிருந்து வெளியே செல்லும் நிகழ்வும சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பதால் அந்த…

Read More

நாசரேத் பகுதியில் கந்தசாமிபுரம் நியாய விலைக் கடையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தொ, பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் 3000 ரூபாய் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் நேற்று ஜனவரி 8ந் தேதி தொடங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாசரேத்தில் நடந்த விழாவில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி துவங்கி வைத்தார்.இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் திமுக நிர்வாகி ரவி செல்வகுமார், துணைத் தலைவர் தம்பு என்ற அருண் சாமுவேல், மாவட்ட பிரதிநிதி தாமரைச்…

Read More

ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று, ரீல்ஸ் எடுத்தவர்களுக்கு பாடம்புகட்டிய லாரி ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. நெடுஞ்சாலையில் நின்று, ஒரு பெண்ணும் 2 சிறுவர்களும் ரீல்ஸ் எடுத்துகொண்டிருந்தனர். அப்போது சாலையில் வந்த வாகனத்தை மறித்த போது, கனரக லாரி ஓட்டுநர் அவர்கள் மீது மோதுவது போல் வந்து விலகி சென்றார். இதனையடுத்து கண்முன்னே மரணத்தை கண்டது போல் ரீல்ஸ் எடுத்தவர்கள் பதறியடித்து ஓடினர்.

Read More

திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகள் ஷர்மிளா தனியார் கல்லூரியில் B.COM இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சர்மிளாவை கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறிவந்துள்ளார். இதற்கு சர்மிளா மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்திருந்த துணிகளை ஷர்மிளா எடுக்க சென்றபோது, பக்கத்து வீட்டு மாடியிலிருந்து தாவி குதித்த வாலிபர் சர்மிளாவை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் இடுப்பு எலும்பு உடைந்து படுகாயம் அடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவின்றி இருந்துவருகிறார் மது போதையில் இருந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த நபர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பதும், பல மாதங்களாக மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து…

Read More