Author: Sahabudeen

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வசந்தி தலைமை வகித்து, காமராஜரின் கல்விப் பணிகள், ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் மற்றும் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலு, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மாணவர்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாறையும், அவரின் சேவைகளையும் நினைவுகூர்ந்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ் ஆசிரியர் காசிநாதன் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.செய்தியாளர் அ.மகேஷ்

Read More

தமிழகத்தில் மீண்டும் அதிவீரிய கொரோனா தொற்று பரவி வருவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குப் பொதுச் சுகாதாரத் துறை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதாகவோ அல்லது அதன் வீரியம் அதிகரித்திருப்பதாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவத் துறை அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, அந்த உயிரிழப்புகளுக்குக் கொரோனா மட்டுமே காரணம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. வேலூர் மற்றும் ஆந்திராவில் உயிரிழந்த நபர்களுக்குச் சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான இணை நோய்கள் இருந்துள்ளன.அவர்களுக்குக் கொரோனா தொற்று என்பது ஒரு தற்செயலான கண்டறிதல் மட்டுமே தவிர, அதுவே மரணத்திற்கு நேரடி காரணம் அல்ல என்று மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ்…

Read More

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஒரு லாக்-அப் மரண விவகாரம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9-ஆம் தேதி 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, தலைமை வார்டன் சுரேஷ் உள்ளிட்ட சிறை ஊழியர்கள் சபரி வர்மனைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை முன்வைத்து, எதிர்க்கட்சியான திமுக, முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் உள்துறை மற்றும் காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள…

Read More

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்டக்குழு கூட்டம், கும்பகோணம் பழைய பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. உலகநாதன், மாநிலக்குழு முடிவுகளை விளக்கி உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.எம். ராமலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், குரு. சிவா, எஸ். கண்ணழகன், மாவட்ட துணைத் தலைவர் எம். புகழேந்தி, மாவட்ட பொருளாளர் டி.ஆர். குமரப்பா உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.கூட்டத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பையும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல், மேகதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை வன்மையாகக் கண்டித்தனர். இந்த முயற்சியை ஒன்றிய அரசு…

சாயர்புரம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்.மற்றும் விழிப்புணர்வு சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரம் நடும் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி .சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரம் நடும் பணி மற்றும் காலநிலை நிதிக்கான இளைய குரல் என்றும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ந.ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல எக்கலாஜிக்கல் கான்சென்ஸ் துறை செயலாளர் குருவானவர் திரு. எச். ஜான் சாமுவேல் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர். அபினேஷ் விலங்குகளின் ஆராய்ச்சி பற்றி…

Read More

கும்பகோணம் மேலக்காவேரியில் அமைந்துள்ள காமராஜர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காமராஜரின் கல்விப் பணிகள், எளிமை, நேர்மை மற்றும் மாணவர்களுக்காக அவர் ஆற்றிய மகத்தான சேவைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்து மாணவர்கள் மத்தியில் பேசினர்,விழாவின் ஒரு பகுதியாக, மாணவ, மாணவிகள் காமராஜரின் உருவ ஓவியங்களை வரைந்து தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். மேலும், விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாகஇந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஏ. வள்ளி மணவாளன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் டி. சரவணன், ஜி. இளவரசு, எஸ். மலர்விழி, பி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர். கல்வி வளர்ச்சிக்காக…

Read More

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர் வார்டு எண் 4 – மேலக்காவிரி பகுதியில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா தமிழ்நாடு காமராஜ் இயக்கம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இதையொட்டி மேலக்காவிரி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காமராஜ் இயக்கத் தலைவரும், கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான கவிஞர் ச. ஐயப்பன் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜரின் சேவைகளையும், கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி தலைவர் சேட்டு மோகன் முன்னிலை வகித்தார். மேலும் ஆ. மகாலிங்கம், வி. பெரியசாமி, காமராஜ் இயக்க பொறுப்பாளர் பாண்டியன், ஆட்டோ ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.பெருந்தலைவர் காமராஜரின்…

Read More

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கும்பகோணம் வட்டக் கிளை மாதாந்திர கூட்டம் கும்பகோணத்தில் உள்ள கோவிந்தன் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் தோழர் தங்க. வளவப்பன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆர். ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.வட்டச் செயலாளர் தோழர் கி. பக்கிரிசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சி. சண்முகம், வரவேற்றார் வட்ட துணைத் தலைவர் ஆ. விஸ்வேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சௌரிராஜன், மோசஸ், கண்ணன், வட்ட துணைத் தலைவர் சேகர் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.கூட்டத்தில் சங்கத்தின் கட்டமைப்பு பணிகள், உறுப்பினர் சேர்க்கை, சங்க சேவைகள், வரவு–செலவுக் கணக்குகள், அரசு ஓய்வூதியர்களை சங்கத்தில் அதிகளவில் இணைப்பது, நிர்வாகத்தின் செயல்பாடுகள், உறுப்பினர்களின் நிறை–குறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.மேலும், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்காக அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அரசாணை எண் 123,…