Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » திருமணத்திற்கு மறுத்த 17 வயது சிறுவனை கடத்திய இளம்பெண்
    இந்தியா

    திருமணத்திற்கு மறுத்த 17 வயது சிறுவனை கடத்திய இளம்பெண்

    SahabudeenBy SahabudeenFebruary 15, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள மான்கூர்டு பகுதியைச் சேர்ந்த சானியா (19) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அந்த இளம்பெண் சிறுவனை தனது வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவர் சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில், போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீட்டில் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என அந்த இளம்பெண் சிறுவனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால்சிறுவன் மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில், இளம்பெண் சிறுவனை திருமணம் செய்ய அழைத்துள்ளார். ஆனால் சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறுவனை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இதனால் திகைத்த சிறுவன், நடந்தவற்றை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மீண்டும் மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மீண்டும் போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Post Views: 687
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.