Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்., 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை
    இந்தியா

    பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்., 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

    SahabudeenBy SahabudeenFebruary 21, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கேரள மாநிலம், புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (51). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பிய தினத்திலிருந்தே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறத் தொடங்கியது.

    இதையடுத்து அவர் சிறுநீரக நிபுணரை அணுகினார். அங்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில் அவரது வயிற்றுக்குள் சுமார் 10 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, எக்ஸ்-ரே அறிக்கைகளுடன் மீண்டும் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். விபரத்தை அறிந்த மருத்துவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் வயிற்றில் உள்ள கத்தரிக்கோலை அகற்றலாம், ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பின்னர் நடந்த விசாரணையில், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக கத்தரிக்கோல் வயிற்றுக்குள் விடப்பட்டு தைக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்த அலட்சியச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் விடப்பட்டு தைக்கப்பட்ட இந்த சம்பவம் கேரள முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Post Views: 823
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.