சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்தநாள் விழா இன்று பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட திமுக சார்பாக கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மேயர் கவிதா, மாநகர திமுக செயலாளர் கனகராஜ், மாவட்ட கழக துணை செயலாளர்கள் மகேஸ்வரி, கருணாதிதி , பகுதி கழக செயலாளர்கள் ராஜா, ஜோதிபாசு, குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்….


