Homeஇந்தியாகோவில்பட்டியில் நடிகர் விஜயின் ரசிகர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

கோவில்பட்டியில் நடிகர் விஜயின் ரசிகர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ளார்.இந்த கட்சி சார்பில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

Must Read

spot_img