Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ஏர்டெல் மற்றும் ஜியோ தற்போது குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகின்றன. எகனாமிக் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 2024-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அன்லிமிடெட் 5ஜி திட்டத்தை நிறுத்தும் என்றும் 5 முதல் 10% வரை கட்டணத்தை உயர்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இரு நிறுவனங்களும் இப்போது கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதிக வாடிக்கையாளர் கையகப்படுத்தல் மற்றும் 5G முதலீடுகளின் அதிக செலவை மீட்டெடுக்க, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை தற்போது RoCE-ஐ குறைந்தபட்சம் 20% அதிகரிக்க பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, எந்தவொரு நிறுவனங்களும் standalone 5ஜி திட்டங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, அவை விரைவில் மாறும். 4G சகாக்களுடன் ஒப்பிடும்போது இந்தத் திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தத் திட்டங்கள் 30 முதல் 40 சதவீதத்திற்கும் அதிகமான டேட்டாவுடன்…
பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே விற்பனையில் ஐபோன் 15 புதிய மாடல் போன் முதல் சாம்சங், கூகுள் போன் வரை பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே விற்பனை தொடங்கி உள்ளது. ஐபோன் முதல் ஆண்ட்ராய்டு போன்கள் வரை அனைத்திற்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 நாள் ஷாப்பிங் திருவிழா நேற்று ஜனவரி 14-ம் தேதி தொடங்கி ஜனவரி 19-ம் வரை நடைபெறுகிறது. பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி முதல் ஆஃபர் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஐபோன் 15, ஐபோன் 14, ஐபோன் 13 போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்துப் பார்ப்போம். ஐபோன் 15 செப்டம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15, 128GB மாடலின் விலை ரூ.79,900 ஆகும், மேலும் பிளிப்கார்ட்-ல் இந்த போன் 8 சதவீத தள்ளுபடியில் ரூ.72,999-க்கு வழங்குகிறது. EMI மற்றும் EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு HDFC வங்கி கிரெடிட் கார்டில்…
உங்கள் எஸ்.பி.ஐ வங்கி கணக்கை வேறொரு கிளைக்கு மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது ரொம்ப சிம்பிள் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் ஆன்லைனிலேயே எளிதாக மாற்றலாம். எஸ்.பி.ஐ-ன் அதிகாரப்பூர்வ YONO ஆப் மூலமாகவும் செய்யலாம். ஆன்லைனில் எஸ்.பி.ஐ வழியாக மாற்றுவது முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் YONO SBI செயலி டவுன்லோடு செய்யவும்.
சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த மகேஷ் பஞ்சகுனுலா, ஏர் ப்ரசர் சென்சார் மூலம் பதிவுசெய்யப்பட்ட சுவாசத் தரவுகளைக் கொண்டு சோதனைகளைத் தொடங்கினார். சுவாசத்தின் போது உருவாகும் காற்றில் ஏற்படும் கொந்தளிப்பு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களைத் திறப்பதற்கான சாத்தியமான பயோமெட்ரிக் அங்கீகார முறையாக செயல்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது.இந்த அணுகுமுறைக்கு ஒரு தனித்துவமான அம்சத்தை சேர்ப்பது அதன் நோயுற்ற நன்மையாகும்; கைரேகை ஸ்கேன் போன்ற பிற சோதனைகளைப் போலல்லாமல், இறந்த நபரால் அதை அனுப்ப முடியாது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள மகேஷ் பஞ்சாக்னுலா மற்றும் அவரது குழுவினர் காற்று அழுத்த சென்சார் மூலம் பதிவுசெய்யப்பட்ட சுவாசத் தரவுகளைக் கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர். ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் 94 மனித சோதனை பாடங்களில் இருந்து 10 சுவாசங்களைப் பதிவுசெய்துள்ளனர், காற்றழுத்த ப்ரசர் சென்சார் பயன்படுத்தி வினாடிக்கு 10,000 முறை அளவீடுகளை எடுத்துள்ளனர் என்று நியூ சயின்டிஸ்ட் தெரிவித்துள்ளது. அந்த…
22 வயதான துருவ் ஜூரல் , கடந்த ஆண்டு டிசம்பரில் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய ஏ அணியில் இடம் பெற்று இருந்தார் இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். அதே நேரத்தில். இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ஓய்வு கேட்ட இஷான் கிஷான் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய அணியில் கே.எல் ராகுல், பரத் உடன் 3வது விக்கெட் கீப்பராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரரான துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளார். 22…
ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தில் சிக்கிவிடும் நிலையில், அவரது இடத்தில் களமாட துபே-வை ரோகித் வளர்த்தெடுக்கும் திட்டத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. கடந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரை தொடரில் இருந்து பாதியிலே வெளியேறும் நிலை வந்தது. தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறக்கப்படுவாரா? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால், ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு ரோகித் – கோலிக்கு இடம் அளிக்க அணி நிர்வாகம் நினைத்தது. இதேபோல், ஐ.பி.எல் தொடரில் தங்களது திறனை நிர்ணயிக்கும் வீரர்களை டி20 அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இதுவரை…
அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர்தான். ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட அவர் தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர்தான். ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட அவர் தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அண்மையில் அளித்த பேட்டியில், “அஸ்வின் ஒரு மிகச்சிறந்த பவுலர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவரை டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியானவராக நான் நினைக்கவில்லை. பந்துவீச்சில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அதேசமயம் பேட்ஸ்மேனாகவும், ஃபீல்டராகவும் அவரால் அணிக்கு என்ன பங்களிப்பை செய்துவிட முடியும்?. டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக அவர் இடம்பெற வேண்டும். ஆனால், வொயிட் பால் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அவர் தகுதியானவர் என…
கோலி இந்தியாவில் ஆடும் போது ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டே இருப்பார். பேட்டிங், பந்துவீச்சு அல்லது பீல்டிங் என எதுவாக இருந்தாலும், அவர் எப்போதும் அனைவரின் கண்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவார். இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய…
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று ஒரே ஒரு போட்டி நடைபெற உள்ளன. இதில், இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன. நடப்பு சீசனில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 3ல் வெற்றி, 9ல் தோல்வி என தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2…
அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென அதன் கதவு அப்படியே பெயர்த்துக் கொண்டு பறந்துள்ளது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் ஏர்போர்ட்டில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. நடுவானில் அந்த கதவு பறந்த நிலையில், அருகே இருந்த இருக்கை ஒன்றும் பறந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த இருக்கையில் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. விமானத்தின் ஜன்னல் பறந்து விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உடையாமல் இருந்த ஐபோன்: அதில் விமானத்தின் பின்புற மிட் கேபின் கதவு சுவருடன் அப்படியே பெயர்ந்துள்ளது தெரிகிறது. உலக அளவில் விமான பயணிகள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் அப்படியே…

