Author: Sahabudeen

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, கும்பகோணத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் எம் எல் ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வீடு தோறும் மக்களின் விவரங்கள் துல்லியமாகவும் விரைவாகவும் பதிவு செய்யப்படுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மக்கள் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026, டிஜிட்டல் முறையில் நடைபெறுவதன் மூலம் தரவுகளின் துல்லியம், விரைவான சேகரிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

Read More

மாட்டிறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் அராஜகம் – சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.சென்னை : திருவெற்றியூர் தாங்கள் என்கிற பகுதியில் மாட்டு இறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் பாரத் இந்து முன்னனி அமைப்பை சேர்ந்த சிவாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் அராஜகத்தில் ஈடு பட்ட இச்சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.தாங்கள் என்கிற பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு இறைச்சி கடைகள் நடத்தி வருகின்றனர். மேலும் எத்தனையோ இந்துதுவ அமைப்பை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ளனர். அவர்களால் இது போன்ற பிரச்சனைகள் வரவில்லை அப்படி இருக்க திடீரென்று பாரத் இந்து முன்னனி சேர்ந்தவர்கள் இறைச்சி கடைகளை மூட சொல்லி அராஜகத்தில் ஈடு பட்டிருப்பது தான் சந்தேகம் எழுகிறது. இச்சபவத்தை சாதாரனமாக கடந்து…

Read More

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 22ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வேளாண் அமைச்சர் ர. வினோத் அஞ்சலிகும்பகோணம், ஜூலை 17 –2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட பள்ளி தீ விபத்தில் 94 பள்ளி மாணவ, மாணவிகள் உயிரிழந்த சோகச் சம்பவத்தின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் பாலக்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.இந்த நினைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கும்பகோணம் வந்திருந்த தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் அவர்கள் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பாலக்கரையில் அமைந்துள்ள பள்ளி தீ விபத்து நினைவிடத்திற்குச் சென்று மெழுகுவத்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார் பின்னர் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளி…

Read More

தமிழகத்தில் ஒரு சில் இடங்களில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள்பேருந்தில் ஏற்கனவே அதிகளவில் கூட்டம்இருந்ததால், மாணவர்கள் பலர் உள்ளே ஏற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், களமருதூர் அரசு பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள், பேருந்தின் பின்புற டேஞ்சர் லைட்டைப் பிடித்தபடி தொங்கியவாறுஉயிரை பணயம் வைத்து .பஸ் படிக்கட்டில் பயணம் செய்தனர். அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More

கும்பகோணம் மாநகர் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பள்ளி வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மெழுகுவத்தி ஏந்தி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். அதேபோல் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் சாக்கோட்டை க. அன்பழகன் முன்னிலையில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினருமான கோ.வி. செழியன், (மு) நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், கும்பகோணம் திமுக மாநகர செயலாளர் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன். டி.வி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உயிரிழந்த குழந்தைகளை நினைவு கூர்ந்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர், கிளைக்…

Read More

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காசீஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் கோயில் ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சிவில் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஊழியர்கள்.முகாமை சிறப்பாக நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர், தொழிலதிபர்திரு. அருள் ராஜா அவர்கள் தலைமையில் முதல்வர் கோயில் ராஜ் ஞான தாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜோசப் பர்னபாஸ், ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Read More

சிறை கைதி சபரிவர்மனின் மரணத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .மேலுமசிறைக்குள் சபரிவர்மனின் உடலில்19 இடங்களில் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சிறைக்குள் கைதிகளை பாதுகாக்க கூடிய சிறை காவலர்களே கைதி சபரிவர்மன் உடல் ஊன முற்றோர் என்றும் பார்க்காமல் இவ்வுறக்கமின்றி மிகவும் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த சிறைகாவலர்களின் இத்தகை செயலை கண்டிக்கிறோம். சபரிவர்மனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் சபரிவர்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ 50 லட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு…

Read More

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான கபடி போட்டி ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காமராஜர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.போட்டியின் தொடக்க விழாவில் தி அரவிந்த் ஆட்டோ ஏஜென்சி (ஹீரோ மோட்டோகார்ப்) நிறுவனத்தின் ராஜ்குமார், அன்னை ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர்பழரசம் பி. விநாயகமூர்த்தி, தூத்துக்குடி கல்விக்கழக செயலாளர் பி.எஸ்.பி.கே.ஜே. சோமு மற்றும் காமராஜர் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. பானுமதி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர்.ஆண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தூத்துக்குடி செயிண்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்று ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது. இரண்டாம் இடத்தை தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளிரூ.7 ஆயிரம், மூன்றாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகளாபுரம் ரூ.5 ஆயிரம், நான்காம் இடத்தை காமராஜர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி ரூ.3 ஆயிரம்பெற்றன.பெண்கள்…

Read More

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வசந்தி தலைமை வகித்து, காமராஜரின் கல்விப் பணிகள், ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் மற்றும் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலு, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மாணவர்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாறையும், அவரின் சேவைகளையும் நினைவுகூர்ந்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ் ஆசிரியர் காசிநாதன் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.செய்தியாளர் அ.மகேஷ்

Read More

தமிழகத்தில் மீண்டும் அதிவீரிய கொரோனா தொற்று பரவி வருவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குப் பொதுச் சுகாதாரத் துறை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதாகவோ அல்லது அதன் வீரியம் அதிகரித்திருப்பதாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவத் துறை அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, அந்த உயிரிழப்புகளுக்குக் கொரோனா மட்டுமே காரணம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. வேலூர் மற்றும் ஆந்திராவில் உயிரிழந்த நபர்களுக்குச் சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான இணை நோய்கள் இருந்துள்ளன.அவர்களுக்குக் கொரோனா தொற்று என்பது ஒரு தற்செயலான கண்டறிதல் மட்டுமே தவிர, அதுவே மரணத்திற்கு நேரடி காரணம் அல்ல என்று மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ்…

Read More